×

திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வாக்குறுதி பாப்பக்காப்பட்டி. வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்த 200 அதிமுகவினர் வேட்பாளர் மாணிக்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

குளித்தலை, ஏப். 4: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து குளித்தலை ஒன்றியம், நகரம், நங்கவரம், மருதூர் பேரூராட்சி, கிருஷ்ணராயபுரம், கிழக்கு ஒன்றியம், தோகமலை கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இவரை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிரசாரம் செய்தார் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே கிராமப்பகுதிகளில் இளைஞர்கள் மாற்று கட்சியினர் ஆர்வத்துடன் திமுகவில் இணைந்து பணியாற்றுகிறோம் என ஆதரவு தெரிவித்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.

நேற்று பாப்பக்காபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வேங்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மூத்த முன்னோடி ஏகாம்பரம் தலைமையில் உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் திமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் முன்னிலையில் திமுக வெற்றி பெற பாடுபடுவோம் என கூறி இணைந்தனர். அப்போது மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா மாவட்ட பிரதிநிதிகள் மெடிக்கல் மாணிக்கம் ஜபருல்லா குளித்தலை வி பி சேகர் அருண்மொழி பாலசுப்பிரமணி இளைஞரணி பிருந்தாவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Monjanur Ilango ,papakkappatti ,200 AIADMK ,Venkampatti ,Manikkam ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்